Home இந்தியா ரூ.50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் காவலர்கள் பறிமுதல் – தேர்தலாணையம் திடீர் கெடுபிடி!

ரூ.50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் காவலர்கள் பறிமுதல் – தேர்தலாணையம் திடீர் கெடுபிடி!

454
0
SHARE
Ad

Tamil_Daily_News_8103144169சென்னை, மார்ச் 13 – 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் போலீஸ் பறிமுதல் செய்யும். இதுபோல, வங்கியில் ரூ.1 லட்சத்திற்கு மேல்  பணம் போட்டாலும், எடுத்தாலும்  கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய கெடுபிடியால் தாக்குபிடிக்க முடியாமல் சிறிய வியாபாரிகள் குமுறுகின்றனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அளித்த பேட்டியில், எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, தனியாக தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

சென்னையிலுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண்  1950 -க்கு தினமும் 300 புகார்கள் வருகின்றன.  தமிழகம் முழுவதும் உள்ள img1140215007_1_1அனைத்து வங்கிகளிலும் தினசரி நடைபெறும் பண பரிமாற்றங்களை கண்காணிக்க மாவட்ட ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஒருவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுத்தாலோ அல்லது பண பரிமாற்றம் செய்தாலோ அவரது பெயர் மற்றும் விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் போலீஸ் பறிமுதல் செய்யும். மேலும், தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்பு நடத்தி, தகவல்களை வெளியிடலாம் என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.