Home இந்தியா வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார்!

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார்!

462
0
SHARE
Ad

Narendra Modi 440 x 215மார்ச் 16 – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகின்றார்.

#TamilSchoolmychoice

இந்துக்களின் புண்ணிய நகராகவும், புராதன நகராகவும் திகழும் காசி நகரை உள்ளடக்கிய வாரணாசி, பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் தொகுதியானதால் இங்கு மோடி மிக எளிதாக வெல்வார் எனக் கருதப்படுகின்றது.

இதற்கு முன்பு இங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முரளி மனோகர் ஜோஷி பாஜக தலைமைத்துவத்தின் நெருக்குதல் காரணமாக மீண்டும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளார். தன்னை வாரணாசி தொகுதியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததற்கு மோடி பாஜக தலைமைத்துவத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதால், அந்த மாநிலத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைய பாஜக இலக்கு கொண்டுள்ளது.  80 தொகுதிகளோடு, இந்தியாவிலேயே அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கின்றது.

காங்கிரஸ் கட்சியும் இந்த மாநிலத்தில் வலிமையுடன் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசின் சார்பில் ராகுல் காந்தியும் இந்த மாநிலத்தில் உள்ள அமேதி நாடாளுமன்ற தொகுதியில்தான் போட்டியிடுகின்றார். இதற்கிடையில் பாஜகவின் தலைவரான ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் போட்டியிடுகின்றார். ஜோஷி கான்பூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் மோடியோடு இணைந்து உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவதால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைவராலும் கவனிக்கப்படும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழப் போகின்றது.

அருண் ஜெட்லி அம்ரிட்சார் தொகுதியில் போட்டியிடும் வேளையில் பிரபல நடிகரான சத்ருக்கன் சின்ஹா பீகார் மாநிலத்தின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுகின்றார்.

பாஜகவின் மகளிர் தலைவிகளில் முக்கியமானவரான உமா பாரதி ஜான்சி தொகுதியில் போட்டியிடுகின்றார்.