Home வணிகம்/தொழில் நுட்பம் 2014 வால்வோ S80 கார் இன்று அறிமுகம்!

2014 வால்வோ S80 கார் இன்று அறிமுகம்!

394
0
SHARE
Ad

2014-volvo-s80-facelift_625x300_51395149189மார்ச் 19 – வால்வோ நிறுவனம், தனது மேம்படுத்தப்பட்ட பதிப்பான 2014 வால்வோ S80 ரகக் காரை இன்று அறிமுகப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு வால்வோ அறிமுகப்படுத்திய S60 மற்றும் XC60 வகை கார்களை விட தற்போது அறிமுகப்படுத்தவுள்ள கார் பல சிறப்புக் கூறுகளைப் பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கிய அம்சங்களாக முகப்பு கிரில், முகப்பு விளக்குகள், பகல் நேர ஓடும் விளக்குகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் ஆகியவை அடங்கும்.

#TamilSchoolmychoice

2014 வால்வோ S80 ரகக் காரானது, இரண்டு வகை பவர்டிரெய்ன்களுடன், அதாவது 5 கலன்கள், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 5 கலன்கள், 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

இதில், டீசல் எஞ்சின் 163 எச்பி ஆற்றலையும், 400NM உருவாக்குதிறன் கொண்டதாகவும், பெட்ரோல் எஞ்சின் 215 எச்பி ஆற்றலையும், 400NM உருவாக்குதிறன் கொண்டதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே உள்ள ஆடம்பரக் கார்களான BMW 5, மெர்சிடிஸ் பென்ஸ் E Class மற்றும் ஆடி A6 வரிசையில், S80 ரகக் காரும் சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.