Home இந்தியா தேர்தலில் என்னை தோற்கடிக்க ராஜபக்சே-மு.க.ஸ்டாலின் சதி – வைகோ குற்றசாட்டு!

தேர்தலில் என்னை தோற்கடிக்க ராஜபக்சே-மு.க.ஸ்டாலின் சதி – வைகோ குற்றசாட்டு!

482
0
SHARE
Ad

1802117030vaikoசென்னை, மார்ச் 19 – சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க பொது செய்லாளர் வைகோ பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும்.

பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 10 தொகுதிகள் கேட்டோம். பின்னர் 9 தொகுதிகள், 8 தொகுதிகள் என்று குறைக்கப்பட்டது. அதன்பிறகு மோடி கூறியாக ராம்ஜெத்மலானி என்னை தொடர்பு  கொண்டு பேசினார்.

அப்போது ஒரு தொகுதியை குறைத்துக் கொள்ள  வேண்டும் என்றார். அதை ஏற்றுக் கொண்டேன். தற்போது 7 தொகுதிகள் தருவதாக உறுதியளித்துள்ளனர். விருதுநகர்,   ஈரோடு, காஞ்சீபுரம், தேனி, ஸ்ரீபெரும் புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன.

#TamilSchoolmychoice

தென்காசி தொகுதியை பெறுவதில் மட்டும் சிக்கல் இருக்கிறது. விருதுநகர் தொகுதியில் என்னை   தோற்கடிக்க வேண்டும் என்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்சே சதி செய்கிறார்.

மு.க.ஸ்டாலினும் என்னை  தோற்கடிக்க  திட்டம் வகுத்துள்ளதாக செயல் வீரர்கள் கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசியுள்ளார். இந்த சதிகளை தகர்ப்போம்.

மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரியை சந்தித்தேன். அது மிகவும் நெழ்ச்சியான சந்திப்பு.
தேர்தலுக்கு செலவு செய்ய போதுமான பலம் ம.தி.மு.க. வேட்பாளர்களிடம் இல்லை. என்றாலும் மக்கள் பலம் இருக்கிறது என வைகோ பேசினார்.