Home உலகம் தென்ஆப்பிரிக்கப் பள்ளிகளில், இந்திய மொழிகள்!

தென்ஆப்பிரிக்கப் பள்ளிகளில், இந்திய மொழிகள்!

819
0
SHARE
Ad

languageதென்ஆப்பிரிக்கா, மார்ச் 21 – கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பள்ளிப் பாடத்திட்டத்தில் நீக்கப்பட்டிருந்த இந்திய மொழிகளை மீண்டும் இணைத்தது தென் ஆப்பிரிக்க அரசு.

தென் ஆப்பிரிக்காவில் வாழும் சுமார் 1.4 மில்லியன் இந்திய வம்சாவளியினரின் கோரிக்கையை ஏற்று தென் ஆப்பிரிக்க அரசு தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 5 இந்திய மொழிகளை, மூன்றாவது மொழிப்பாடமாக தனது பாடத்திட்டத்தில் அறிவித்துள்ளது.

இது குறித்து மாகாண கல்வித்துறை தலைவர் நிகோசினதி சிஷி சுற்றறிக்கையில் கூறியதாவது, இந்த மொழிப்பாட திட்டமானது அரசுப் பள்ளிகளில், பள்ளி இறுதி ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.

#TamilSchoolmychoice

இதன் முதற்கட்டமாக, இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் குவாசுலு நடால் மாகாண பள்ளிகளில் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது  எனக்கூறினார்.