பாகிஸ்தான், மார்ச் 21 – பாகிஸ்தானில் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போரில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாத அமைப்பினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முன்வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, தலிபான்கள் தாங்கள் சிறைப்பிடித்திருந்த துணை ராணுவத்தினரைக் கொன்ற காணொளிக் காட்சிகளை வெளியிட்டது.
அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனை பாகிஸ்தான் அரசு மீண்டும் தொடங்கயிருக்கின்றது.
தலிபான்களுடனான பேச்சுவார்த்தைகளை நேரடியாகத் தொடர முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான இடம் இன்னும் 48 மணி நேரத்திற்குள் முடிவு செய்யப்படும் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார்.
மேலும் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்த அரசு, கைபர் பக்துன்க்வாவின் மிரான்ஷா பகுதியில் உள்ள பன்னு விமானநிலையப் பகுதியை தேர்ந்தெடுத்தது. அதற்கு தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.