Home உலகம் தென்ஆப்பிரிக்காவில் 5 இந்தியர்களுக்கு உயரிய விருதுகள்!

தென்ஆப்பிரிக்காவில் 5 இந்தியர்களுக்கு உயரிய விருதுகள்!

639
0
SHARE
Ad

jacobZuma_1416346cஜோகன்னஸ்பர்க், ஏப்ரல் 22 – தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு பிரச்சனைகளுக்கு  எதிராகப் போராடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேருக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி, தீண்டாமை  ஆகியவற்றை ஒழிப்பதற்கு போராடிய இன்ரஸ் நாயுடு, ஷிரிஸ் நானாபாய், ரெஜி வாண்டையார் ஆகியோருக்கு, ‘ஆர்டர் ஆப் மென்டி’ விருதும், மனித உரிமைக்காக போராடிய, அப்துல்ஹே ஜசாத்துக்கு, ‘ஆர்டர் ஆப் லுத்லி’ விருதும், மருத்துவத்துறையில் சேவையாற்றிய, பிரிட்டோரியா பல்கலை பேராசிரியர் நம்ரிதாவுக்கு, ‘ஆர்டர் ஆப் மபுன்குப்வி’ விருதும் வழங்கப்பட்டன.

நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக செயல்படும் குடிமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் இந்த உயரிய விருதுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice