ஏப்ரல் 22 – வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி நோக்கியா நிறுவனம் தங்களது லூமியா 2520 தட்டை கணினியின் (Tablets) 30,000 சார்ஜர்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுள்ளது.
மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர்களால் தயாரிக்கப்பட்டிருந்த இந்த ஏசி -300 வகை சார்ஜரானது, ஆஸ்திரியா, பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து நோக்கியா வெளியிட்ட அறிக்கையில், “சார்ஜரின் பிளாஸ்டிக் மூடி தனியாகப் பிரிந்து வருவதால், அதை பயன்படுத்தும் போது அதன் உள் பாகங்களை தொடும் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த சார்ஜரைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுவனம் எடுக்கும்” என்று தெரிவித்துள்ளது.