Home இந்தியா 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ராஜா, கனிமொழியிடம் அடுத்த மாதம் 5ஆம் தேதி வாக்குமூலம் பெறப்படும்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ராஜா, கனிமொழியிடம் அடுத்த மாதம் 5ஆம் தேதி வாக்குமூலம் பெறப்படும்

598
0
SHARE
Ad

Raja Kanimoszhi 440 x 215புதுடில்லி, ஏப்ரல் 21 – எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகத்திற்கான நாடாளுமன்றத்  தேர்தல்  நடைபெறும் வேளையில், திமுகவுக்கு மற்றொரு பின்னடைவாக,2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுவழக்கில், தி.முக. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் கருணாநிதி மகள்கனிமொழி ஆகிய இருவரிடமும் அடுத்த மாதம் 5ஆம் தேதி வாக்குமூலம் பெறப்படும்  என, டில்லி, சி.பி.ஐ., நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

‘2ஜிஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், 1.76 லட்சம் கோடி ரூபாய், அரசுக்குஇழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சென்ட்ரல் ஆடிட்டர் ஜெனரல்) தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த இழப்பீடு விவகாரம் குறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தி.மு.க,, ராஜ்யசபாஉறுப்பினர் கனிமொழி மற்றும் தொழில் அதிபர்கள், மத்திய அரசு துறை அதிகாரிகள்உட்பட, 16 பேரை கைது செய்தது.

டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், ஜாமீன் பெற்று தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, 824 பக்க அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள, 1,718 கேள்விகளைப் படித்துப் பார்த்து, நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர்கள் வாக்குமூலம்அளிக்க வேண்டும்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சிலர், அறிக்கையை படித்து பார்த்து, வாக்குமூலம்அளிக்க, தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டுமென கேட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சைனி குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்கள் நேரடியாக பேசுவதற்கான நேரம் வந்து விட்டது என்றும் எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம், அடுத்த மாதம், 5ஆம் தேதி முதல்  வாக்குமூலம் பெறப்படும் என்றும் அறிவித்தார்.

இவ்வாறு கூறிய பின்னர் நீதிபதி, வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம், 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.