Home இந்தியா பெங்களூர் காங்கிரஸ் வேட்பாளர் நீல்கேனிக்கு ரூ.7,700 கோடி சொத்து!

பெங்களூர் காங்கிரஸ் வேட்பாளர் நீல்கேனிக்கு ரூ.7,700 கோடி சொத்து!

383
0
SHARE
Ad

nandan-nilekaniபெங்களூர், மார்ச் 21 – நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூர் தெற்கு நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நந்தன் நீல்கேனி தனக்கு ரூ.7,700 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான ஆதார் அடையாள அட்டையின் முக்கிய வடிவமைப்பாளரான நந்தன் நீல்கேனி, கடந்த 9-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதற்கு மறு நாள் பெங்களூர் தெற்கு தொகுதியின் நாடாளுமன்றத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பெங்களூரில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நான் ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பாக்கெட்டில் 200 ரூபாயுடன் வாழ்க்கையை துவக்கினேன்.

#TamilSchoolmychoice

ரூ. 10 ஆயிரம் முதலீட்டுடன் இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினோம். இன்று அந்த நிறுவனத்தின் அபார வளர்ச்சியினால் எனக்கும் எனது மனைவி ரோகிணி நீல்கேனிக்கும் ரூ.7,700 கோடிக்கு சொத்து மதிப்பு உள்ளது.

பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் எனது சொத்து மதிப்பும் அதிகரித்தது.

தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் எனக்கு 1.45 சதவிகித பங்குகளும், எனது மனைவிக்கு 1.3 சதவிகித பங்குகளும் உள்ளன.  சொத்து மதிப்புகளை வெளிப்படையாகக் கூறுவதில் பெருமைப்படுகிறேன் என நந்தன் நீல்கேனி கூறியுள்ளார்.