Home இந்தியா சுரேஷ் கல்மாடி பா.ஜ.க.வில் இணைகிறார்?

சுரேஷ் கல்மாடி பா.ஜ.க.வில் இணைகிறார்?

497
0
SHARE
Ad

suresh-kalmadi-புனே, மார்ச் 23 – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட  காங்கிரஸ் கட்சி, இடம் ஒதுக்காததால், அதிருப்தியடைந்துள்ள காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின், மாஜி ஒருங்கிணைப்பாளர்  சுரேஷ் கல்மாடி, இரண்டு நாட்களில் தன் முடிவை தெரிவிக்கவுள்ளார்.

அவர், பா.ஜ.க.வில் இணையலாம் என, அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம், புனே தொகுதியில், மூன்று முறை நாடாளுமன்ற உரிப்பினராக இருந்தவர் சுரேஷ் கல்மாடி. டி

ல்லியில் நடந்த, காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்பாளராக, கல்மாடி இருந்த போது, பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட, கல்மாடி, சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இந்த குற்றச்சாட்டு காரணமாக, கல்மாடி, காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது, புனே தொகுதியில், கல்மாடிக்கு பதிலாக, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர், விஷ்வஜித் கடம், நிறுத்தப்பட்டுள்ளார். இதனால், கல்மாடி கோபமடைந்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, என் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால், கட்சி மேலிடம், ‘சீட்’ கொடுக்காமல் இருக்கலாம். ஆனால், என் மனைவி மீரா, கட்சியின் தீவிர உறுப்பினராக உள்ளார்.

புனேயின் பல பகுதிகளில் சமூக சேவைகளை செய்து வருகிறார். எனக்கு பதில், என் மனைவிக்கு, புனேயில் சீட் கொடுத்திருக்கலாம். கொலை குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கும் போது, எனக்கு கொடுக்கக்கூடாதா?

இரண்டு நாட்கள் கழித்து என் முடிவை அறிவிக்க உள்ளேன் என, சுரேஷ் கல்மாடி கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்குள் கல்மாடி விஷயத்தில், காங்கிரஸ் சாதகமான முடிவை அறிவிக்காவிட்டால், அவர் பா.ஜ.க.வில் இணைவதற்கு வாய்ப்புள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.