Home இந்தியா 3-வது கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முடிந்தது – நிதின் கட்காரி, நடிகை ஜெயபிரதா போட்டி!

3-வது கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முடிந்தது – நிதின் கட்காரி, நடிகை ஜெயபிரதா போட்டி!

445
0
SHARE
Ad

Jayapradaடெல்லி, மார்ச் 23 – 9 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், 3-வது கட்ட தேர்தல், ஏப்ரல் 10-ஆம் தேதி 18 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

இதில், டெல்லி, அரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லா தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த 3-வது கட்ட தேர்தலை சந்திப்பவர்களில், பா.ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, நடிகை ஜெயபிரதா, மத்திய அமைச்சர் சசிதரூர்,

பிரபுல் படேல், கே.விதாமஸ், கே.சி.வேணு கோபால், இ.அகமது மற்றும் நடிகர்கள் இன்னோசென்ட், மனோஜ் திவாரி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

#TamilSchoolmychoice