Home இந்தியா இன்று மோடியைச் சந்திக்கிறார் நடிகர் நாகார்ஜூனா – மனைவி அமலாவுக்கு சீட் பெற முயற்சி!

இன்று மோடியைச் சந்திக்கிறார் நடிகர் நாகார்ஜூனா – மனைவி அமலாவுக்கு சீட் பெற முயற்சி!

530
0
SHARE
Ad

24-1395641824-nagarjuna34-600-jpgஹைதராபாத், மார்ச் 24 – பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்தார் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா. தெலுங்கின் முன்னணி சினிமா நடிகர்கள்.

தொடர்ந்து ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை நோக்கிச் செல்கின்றனர் நட்சத்திரங்கள்.

சில தினங்களுக்கு முன்புதான் புதிதாக கட்சி ஆரம்பித்த ஆந்திர பவர் ஸ்டார் பவன் கல்யாண். நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். இப்போது நாகார்ஜூனா மோடியைச் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவிக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பின் நோக்கம், தன் ஆதரவைத் தெரிவிப்பதோடு, மனைவியும், முன்னாள் நடிகையுமான அமலாவுக்கு தேர்தலில் சீட் வேண்டும் என்ற கோரிக்கையை தெரியப்படுத்துவதற்குத்தான் என்கிறார்கள்.

தனது இந்த விருப்பத்தை ஏற்கெனவே பாஜக தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடுவிடம் தெரிவித்திருந்தார் நாகார்ஜூனா.
பாஜகவைப் பொருத்தவரை, ஆந்திராவின் முன்னணி நடிகர்களை வளைத்துப் போட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.

அவர்கள் மூலம் இந்த முறை ஆந்திராவில் வலுவாகக் காலூன்ற முடியும் என நம்புகிறது. ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு நிகரான செல்வாக்குடன் திகழும் பவன் கல்யாண் ஆதரவை தேடிப் பெற்றது பாஜக.

அடுத்து இப்போதும் ரசிகர்கள் மத்தியில் முதல் நிலை நடிகராக உள்ள நாகார்ஜூனைப் பிடித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் சில நடிகர்கள் பாஜகவுக்கு வரக்கூடும் என்கிறார்கள்.