ஆனால் அந்தப் படம் வெளியாக முடியாமல் அரசியல் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட நேரத்தில் இரண்டு விஜய்களும் வாயைத் திறக்கவே இல்லை. நடிகர் விஜய் என் படம் எப்படியாவது வெளியாகணும். முதல்வர் நல்லவங்க. என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். இயக்குநர் விஜய் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்.
தலைவா அனுபவம் குறித்து அவர் கூறுகையில், இப்போது நான் இயக்கும் சைவம் திரைப்படம் தலைவாவிற்கு முன்பே எடுக்கப்பட வேண்டிய படம். நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்காக சைவம் திரைப்படத்தை தள்ளிவைத்து விட்டு தலைவா எடுத்தேன். தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் ஏற்பட்ட வலி சாதாரணமானது அல்ல.
காலை பல கனவுகளுடன் தூக்கத்திலிருந்து எழுந்து இரவு வலியுடன் உறங்கச் செல்வது ஒப்புக்கொள்ள முடியாதது. என் திரையுலக வாழ்க்கையின் மறக்க முடியாத 10 நாட்கள் என்றால் தலைவா பிரச்சனை நடந்த அந்த கால கட்டம்தான், என்றார் இயக்குநர் விஜய்.