Home கலை உலகம் இயக்குநர் விஜய்-அமலா பால் திருமணம் முடிந்தது!

இயக்குநர் விஜய்-அமலா பால் திருமணம் முடிந்தது!

619
0
SHARE
Ad

amalapuleசென்னை, ஜூன் 12 – இயக்குநர் விஜய் – அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததை பத்திரிகைகள் அம்பலமாக்கியது. இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்புதான் இருவருமே தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.

கடந்த ஜூன் 7-ஆம் தேதி விஜய் -அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து. இன்று இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், நட்சத்திரங்கள் சூழ இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகள் அமலா பாலை நிற்க வைத்து கழுத்தில் தாலி கட்டினார் விஜய். இயக்குநர் விஜய் – இந்தத் திருமணத்துக்கு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்தினர்.

#TamilSchoolmychoice

இயக்குநர்கள் மணிரத்னம், பாலா, ப்ரியதர்ஷன், நடிகர் விக்ரம், ஆர்யா, லிஸி ப்ரியதர்ஷன், இயக்குநர் ஆர் சுந்தரராஜன், விஜய் மனைவி சங்கீதா, இயக்குநர் பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஸி மோகன், ஜிவி பிரகாஷ், சைந்தவி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பிலிம்சேம்பர் கல்யாண், எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா, நக்கீரன் கோபால் உள்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.