Home கலை உலகம் இயக்குநர் விஜய் மறுமணம் புரிகிறார்

இயக்குநர் விஜய் மறுமணம் புரிகிறார்

1524
0
SHARE
Ad

சென்னை – பிரபல தமிழ்ப் பட இயக்குநர் விஜய் நடிகை அமலா பாலை 2014-இல் மணந்து அவர்கள் இருவரும் 2016-இல் பிரிந்தனர். 2017-இல் அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்து கொண்ட அவர்கள் அதற்குப் பின்னர் தத்தம் பாதைகளில் தொழில் ரீதியாகத் தொடர்ந்தனர்.

விவாகரத்துக்குப் பின்னர் தொடர்ந்து படங்களை இயக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் விஜய். அவர் இயக்கி அண்மையில் வெளிவந்த படம் ‘தேவி 2’. பிரபுதேவா-தமன்னா இதில் நடித்திருந்தனர்.

டாக்டர் ஆர்.ஐஸ்வர்யாவுடனான தனது திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2019) நடைபெறும் என விஜய் அறிவித்திருக்கிறார். குடும்பத்தார்கள் ஏற்பாடு செய்த திருமணம் இதுவென்றும் புதிய இல்லற வாழ்க்கையைத் தான் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

விஜய்யுடனான மணமுறிவுக்குப் பின்னர் அமலா பால் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குநர் விஜய் ஈடுபட்டு வருகிறார்.