Home Featured கலையுலகம் விஜய் -அமலாபால் விவாகரத்து செய்ய முடிவு!

விஜய் -அமலாபால் விவாகரத்து செய்ய முடிவு!

826
0
SHARE
Ad

director-vijay amala-paulசென்னை – இயக்குநர் விஜயும், நடிகை அமலாபாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாமென விஜய் குடும்பத்தார் அமலாபாலுக்குக் கட்டுப்பாடு விதித்திருந்தும் கூட, அவர் பசங்க 2, அம்மா கணக்கு என தொடர்ச்சியாகப் படங்கள் நடிக்கத் தொடங்கினார்.

இதனால் விஜய்க்கும், அமலாபாலுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இரு வீட்டாரோடு, நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், அவர்கள் இருவரும் சுமூகமாகப் பேசி பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.