Home இந்தியா கள்ள ஓட்டு போடுங்கள், மத்திய அமைச்சர் சரத்பவார் பேச்சு!

கள்ள ஓட்டு போடுங்கள், மத்திய அமைச்சர் சரத்பவார் பேச்சு!

598
0
SHARE
Ad

sharad-pawar-medium (1)மும்பை, மார்ச் 24 – மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மந்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத்பவார் தொண்டர்களை கள்ள ஓட்டு போட சொன்னதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நவிமும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட சரத்பவார், தொண்டர்களை இரண்டு முறை ஓட்டு போட கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சாத்ரா தொகுதியில் ஏப்ரல் 17-ஆம் தேதியும், நவி மும்பை தொகுதியில் 24-ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் சரத்பவார் தனது தொண்டர்களிடம், முதலில் சாத்ரா தொகுதியில் ஓட்டு போடுங்கள். பின்னர் நவிமும்பை தொகுதியிலும் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்.

#TamilSchoolmychoice

அதற்குள் அடையாள மையை அழித்துவிடலாம் என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சரத்பவாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது இந்தியாவின் தேர்தல் விதிகளை மீறும் விதமாக உள்ளது என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக பாஜக தலைவர் வினோத் தாவ்டே கூறியுள்ளார். சரத்பவார் மீது தேர்தல் ஆணையம் நடவடிகை எடுக்குமா ?