புதுடில்லி, ஜூலை 4- மும்பைக் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் பயங்கர தீவிரவாதியும், மும்பை நிழல் உலகத் தாதாவுமாகிய தாவூத் இப்ராகிம் பல்லாண்டுகாலமாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.
அமெரிக்காவிற்குப் பிடி கொடுக்காமல் பின்லேடன் கண்ணாமூச்சி காட்டியதுபோல், இந்தியாவிற்குத் தாவூத் காட்டிவருகிறான்.
இது குறித்து அவர் கூறியதாவது:
“சில நாட்களுக்கு முன்பு நான் லண்டன் சென்றிருந்த போது தாவூத் இப்ராகிமை நேரில் சந்தித்துப் பேசினேன். அவர் சில விசயங்களை வெளிப்படையாக என்னிடம் தெரிவித்தார்.
முக்கியமாக, ‘எந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.
இது தொடர்பாக முழு விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்தியாவுக்கு வர எனக்குப் பயமாக இருக்கிறது. அங்கே என் உயிருக்கு ஆபத்துள்ளது.’ என்று என்னிடம் தாவூத் இப்ராகிம் கூறினார்.
மேலும், மராட்டிய முதல்வராக இருந்த சரத்பவாரிடம் இந்தச் சந்திப்பு குறித்துச் சொன்னேன். சோட்டா ஷகீலும் தாவூத் இப்ராகிமும் இந்தியா வந்து சரண் அடைய விரும்புவதாகக் கூறினேன். ஆனால் அவர் அரசு தரப்பில் இதை ஏற்க மறுப்பதாகச் சொல்லிவிட்டார்” என்று ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.
மேலும், இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், மராட்டிய முன்னாள் முதல்வர் சரத் பவார், ராம்ஜெத்மலானியின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.