Home கலை உலகம் நீதிமன்றத்தில் விஷால் புதிய மனு தாக்கல்!

நீதிமன்றத்தில் விஷால் புதிய மனு தாக்கல்!

584
0
SHARE
Ad

Vishalசென்னை, ஜூலை 4- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துச் சரத்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பில் விளக்கம் கேட்க வேண்டும் என்று நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே விஷால் தரப்பிலிருந்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், அதில் எங்கள் தரப்பிடம் விளக்கம் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி நடிகர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைத் தடை(caveat) மனு தாக்கல் செய்துள்ளார்.