மும்பை, ஏப்ரல் 22 – தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி அரசில் இடம் பெற தேசியவாத காங்கிரஸ் தயங்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும்பாண்மை கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது அணி அரசில் இடம்பெறுவது பற்றி பாசீலிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் மூன்றாவது ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள பவார், தேர்தலுக்கு பின் அப்படி ஒரு அணி உருவாகலாம் என்று கூறியுள்ளார்.
எனினும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சரத்பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பாண்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அண்மை காலத்தில் அடிக்கடி சர்ச்சை குறித்த கருத்துகளை தெரிவித்து வரும் சரத்பவாரின் மூன்றாவது அணி ஆட்சி பற்றிய கருத்து காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.