Home இந்தியா மக்களை ஏமாற்றும் சிந்தனை இல்லை – ஜெயலலிதா

மக்களை ஏமாற்றும் சிந்தனை இல்லை – ஜெயலலிதா

488
0
SHARE
Ad

jayaசென்னை, ஏப்ரல் 22 – முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தியாகராயநகரில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது,

இந்த தேர்தல் தருமத்திற்கும், அதருமத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். நான் கடந்த ஒரு மாதங்களாக அனைத்து தொகுதிகளுக்கும் சென்று சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

எனது பேச்சில் நயவஞ்சகம் இல்லை. மக்களை ஏமாற்றும் சிந்தனை இல்லை. ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சு இல்லை.

#TamilSchoolmychoice

மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களையும், வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும், கீழ்த்தரமாக விமர்சிக்கும் பேச்சு இல்லை. வயதை காட்டி வாக்கு யாசகம் செய்யும் பேச்சு இல்லை.

மாறாக, தமிழர்களின் வாழ்வில் வசந்தம் வீச வழிவகுக்கும் பேச்சாக, ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் பேச்சாக, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் பேச்சாகத்தான் என்னுடைய உரைகள் அமைந்தன.

எனது தேர்தல் பிரச்சாரத்தில் உண்மையையும், யதார்த்தத்தையும் மட்டுமே நான் எடுத்துரைத்தேன். அவை எல்லாம் எனது உள்ளக்குமுறல்கள்.

உண்மைக்கும், பொய்மைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வாய்மை வெல்ல அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஜெயலலிதா பேசினார்.