Home இந்தியா வதோதரா தொகுதியில் மோடியை எதிர்த்து மதுசூதன் மிஸ்திரி போட்டி!

வதோதரா தொகுதியில் மோடியை எதிர்த்து மதுசூதன் மிஸ்திரி போட்டி!

480
0
SHARE
Ad

madhusoodhananடெல்லி,மார்ச் 26 – வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக மதுசூதனன் மிஸ்திரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அஜய் மாக்கென் டெல்லியில் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து போட்டியிடும் நரேந்திர மோடி குஜராத் மாநில வதோதரா மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார்

#TamilSchoolmychoice

இந்நிலையில், மோடியை எதிர்த்து போட்டியிட நரேந்திர ராவத் மறுப்பு தெரிவித்ததை அடுத்து வதோதரா தொகுதியில் மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளராக மதுசூதன் மிஸ்திரியை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ள மதுசூதன் மிஸ்திரி, மோடியை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் அறிவித்துள்ள முதல் வேட்பாளர் ஆவார். மிஸ்திரி கடந்த 2004 மக்களவை தேர்தலில் குஜராத்தின் சபர்காந்தா தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இது குறித்து மதுசூதனன் மிஸ்திரி கூறுகையில், “இந்த வாய்ப்புக்காகத்தான் நான் நீண்டகாலமாக காத்திருந்தேன். மோடியை எதிர்த்து போட்டியிட்டு வதோதராவில் அவரை தோற்கடிப்பேன். அதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.