Home இந்தியா திமுக ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம் – அழகிரி கருத்து

திமுக ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம் – அழகிரி கருத்து

594
0
SHARE
Ad

Alagiri-295x200_alசென்னை,மார்ச் 26 – வரும் மக்களவைத் தேர்தலில் திமுக ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதுவே பெரிய விஷயம் என்று இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறியுள்ளார்.

முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அழகிரி அறிவித்தார்.

மேலும், திமுகவில் இருந்து என்னை நீக்கக் காரணமானவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க மாட்டேன். 2 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சூசகமாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

மு.க அழகிரியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக நேற்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.