Home நாடு MH370 குறித்து பேஸ்புக்கில் கருத்து – ஏர் ஏசியா எக்ஸ் விமானி பணி நீக்கம்!

MH370 குறித்து பேஸ்புக்கில் கருத்து – ஏர் ஏசியா எக்ஸ் விமானி பணி நீக்கம்!

501
0
SHARE
Ad

tony-fernandes-airasiaகோலாலம்பூர், மார்ச் 26 – MH370 விமானம் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்கள் வெளியிட்டிருந்த தங்கள் ஏர் ஏசியா எக்ஸ் விமானிகளில் ஒருவரை, ஏர் ஏசியா நிறுவனம் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ், “ஏர் ஏசியா நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் விதமாக, பேஸ்புக்கில் தவறான கருத்தை வெளியிட்ட ‘ஏர் ஏசியா எக்ஸ்’ மூத்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டார்” என்று தனது டுவிட்டர் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்து காயப்படுத்துவது போல் இருப்பதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டோனி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice