Home கலை உலகம் ஜெயா தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி

ஜெயா தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி

608
0
SHARE
Ad

rajnikanth-pictures-080சென்னை,மார்ச்27 – தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுப்பதை நடிகர் ரஜினிகாந்த் பெரும்பாலும் தவிர்த்தே வந்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

எல்லா தமிழக தொலைக்காட்சிகளும் அரசியல் பின்னணி கொண்டவை என்பதால் எந்த தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தாலும் தன்மீது அரசியல் சாயம் பூசப்பட்டு விடும் என்பதால்தான் ரஜினி இந்த முடிவை எடுத்து, பின்பற்றி வருவதாகக் கூறுவார்கள்.

ஆகக் கடைசியாக அவர் ஒரு தொலைக்காட்சிக்குப் பிரத்தியேகப் பேட்டி கொடுத்தது சன் தொலைக்காட்சிக்குத்தான். அதுவும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த எந்திரன் படம் சன் டிவி நிறுவனத்தாரின் தயாரிப்பு என்பதால் தவிர்க்க முடியாமல் சன் தொலைக்காட்சியில் எந்திரன் சம்பந்தமான பேட்டிகளை வழங்கிய ரஜினி, அதன் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார்.

சமீபத்தில் கோச்சடையான்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், ரஜினிகாந்த் ஜெயா தொலைக்காட்சிக்காக பிரத்தியேக பேட்டி கொடுத்துள்ளார். கோச்சடையான் படத்திற்காக இந்த பேட்டி கொடுக்கப்பட்டது என்றாலும், சில சினிமா சம்பந்தம் அல்லாத கேள்விகளுக்கும்இதில் ரஜினிகாந்த் பதில் கூறியுள்ளாராம்.

ஜெயா தொலைக்காட்சியின் உள் அரங்கில் (ஸ்டுடியோ) நடைபெற்ற எந்த பேட்டியில் நடிகர் விவேக் கலந்துகொண்டு ரஜினிகாந்திடம்கேள்வி கேட்டுள்ளார்.

இப்பேட்டி இன்னும் ஓரிரு வாரங்களில் ஒளிபரப்பப்பட உள்ளது.