இலங்கை, மார்ச் 28 – இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி கட்டப் போரில் சரண் அடைந்த வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனை அடுத்து அமெரிக்கா மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி, ஜ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்தது.
இதனை 23 நாடுகளின் ஆதரித்தன. இந்நிலையில், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் தெரிவித்ததாவது,
அமெரிக்கா கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தால் அரசு மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகள் பெரிதும் பாதிக்கப்படுமேயன்றி பயன் ஏதும் இருக்காது. அதனால் இந்த தீர்மானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.
நாங்கள் ஏற்கனவே தொடர்ந்த நல்லிணக்க நடைமுறைகளை எவ்வித அச்சமும் இன்றி மீண்டும் தொடர்வோம்” என்றார். இதே கருத்தினை இந்தியாவும் கூறியிருக்கின்றது.
கடந்த 2009, 2012, 2013 ஆண்டுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா, முதல் முறையாக இலங்கைக்கு சாதகமாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.