Home இந்தியா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

588
0
SHARE
Ad

WR_20140326155811டெல்லி, மார்ச் 28 – காங்கிரஸ் கட்சி ‘உங்கள் குரல் எங்கள் வாக்குறுதி’ என்ற தலைப்பில் 49 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகிய மூவரும் அந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சில புதிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.
அடுத்த 3 ஆண்டுகளில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி. 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. பணவீக்கம், விலைவாசி கட்டுப்படுத்தப்படும்.

தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு. 70 கோடி பேரை நடுத்தர வருமான மக்களாக தரம் உயர்த்துதல். அனைவருக்கும் வங்கி கணக்கு இருப்பது உறுதி செய்யப்படும்.

#TamilSchoolmychoice

18 மாதங்களில் அனைத்து பஞ்சாயத்துக்களும் அகண்ட அலை வரிசை சேவையுடன் இணைக்கப்படும். இப்படி பல புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்.