மார்ச் 28 – மலேசியாவில் ஹூண்டாய் கார்களின் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான ‘ஹுண்டாய் சைம் டார்பி மோட்டார்ஸ்’ (HSDM) நிறுவனம் நேற்று ஹூண்டாயின் i30 ரக கார்களை அறிமுகம் செய்தது.
இது குறித்து HSDM-ன் நிர்வாக இயக்குனர் லாவ் இட் முன் கூறுகையில், “மலேசிய வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற வகையில் உள்ள, i30 ரக கார்கள், ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 1.5மில்லியனுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. தென்கொரிய கார்களில் உள்ளது போன்ற இதன் ‘fluidic sculpture’ வடிவமைப்பு, ஸ்போர்ட்ஸ் ரக கார்களின் தோற்றத்தைக் கொடுக்கின்றது. மேலும் சூரிய ஒளியைத் தடுக்கும் கவர்ச்சியான காரின் மேற்பகுதி, பயணர் பாதுகாப்பிற்கான ஏர் பேக்குகள் (Air Bags), காரினை இயக்குவதற்கு வசதியாக திறன் மிக்க மிதவைப் பொத்தான்கள், நிறுத்துமிடத்தை தேர்வு செய்வதற்கான உதவி அமைப்புகள் மற்றும் சிறப்பான ப்ளுடூத் வசதிகள் போன்றவை வாடிக்கையாளர்களை மிகவும் கவரும்” என்று தெரிவித்தார்.
1.8L எக்ஸிகியூட்டிவ், 1.8L ஸ்போர்ட்ஸ் என இருரகங்களில் வெளிவந்துள்ள இந்த கார்களின் விலை முறையே RM127,888 மற்றும் RM132,888 (காப்பீட்டுடன் சேர்த்து) ஆகும்.