Home இந்தியா இந்தியாவில் ஹுண்டாய் கார்களின் விலை 30,000 ரூபாய் உயர்கிறது!

இந்தியாவில் ஹுண்டாய் கார்களின் விலை 30,000 ரூபாய் உயர்கிறது!

682
0
SHARE
Ad

hyundai1புது டெல்லி, ஜூலை 26 – இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலையை 30,000 ரூபாய் அளவிற்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. உற்பத்தி விலை வழக்கத்தை விட அதிகமாவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஹுண்டாய் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போதய நிலையில், இந்த விலை ஏற்ற நடவடிக்கை அவசியமாகிவிட்டது. உற்பத்தி விலை அதிகமாவதால் கார்களின் விலையையும் உயர்த்தி உள்ளோம். பெரும்பாலான செலவுகளை நாங்கள் நீக்கி விட்டோம். இருந்தும் கடும் போட்டிகள் நிறைந்த இந்திய சந்தைகளில், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது” என்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த விலை உயர்வு, ‘எஸ்யூவி’ (SUV) ரக கார்களான கிரிடாவிற்கு மட்டும் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 

கார்கள் வர்த்தகத்தில் இந்தியா, உலக அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. எதிர்வரும் 2020-ம் ஆண்டிற்குள், இந்த வரிசையில், இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்தகைய இந்திய சந்தைகளில், ஹுண்டாய் இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.