Home அவசியம் படிக்க வேண்டியவை அழகிரி தாயார் தயாளு அம்மா, ராஜாத்தி, கனிமொழியுடன் சந்திப்பு! மீண்டும் திமுகவுக்கு திரும்புகிறாரா?

அழகிரி தாயார் தயாளு அம்மா, ராஜாத்தி, கனிமொழியுடன் சந்திப்பு! மீண்டும் திமுகவுக்கு திரும்புகிறாரா?

768
0
SHARE
Ad

Alagiri-MK-300-x-200மார்ச் 28 – திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி கடந்த சில நாட்களாக திமுகவை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகின்றார். இது திமுக வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

இதனால், திமுகவின் பல வேட்பாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால், தங்களின் வெற்றி வாய்ப்பு – அப்படி ஒன்று இருக்குமானால் – பாதிப்படையலாம் என அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

இதற்கிடையில் மனஸ்தாபங்களைமறந்து அழகிரியை சமரசப்படுத்தும் முயற்சிகளும் பின்னணியில் நடக்கிறது.

இந்நிலையில், கடந்த 26–ந் தேதி மாலையில் சிந்தாதிரிபேட்டை பொதுக் கூட்டத்துக்கு கருணாநிதி சென்றபிறகு மு.க. அழகிரி கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார்.

அங்குதாயார் தயாளு அம்மாளை சந்தித்துப் பேசினார். அப்போது “அப்பாவிடம் பேசி உன்பிரச்சனையை நான் சரிசெய்கிறேன். கவலைப் படாதே” என்று தயாளு ஆறுதல் கூறியுள்ளார்.

இதையடுத்து இரவில் மதுரை செல்லும் திட்டத்தை ரத்து செய்து விட்டு போயஸ் கார்டனில் மகன் துரை தயாநிதி வீட்டில் அழகிரி தங்கினார்.

ராஜாத்தி – கனிமொழியுடன் சந்திப்பு

நேற்று (27 மார்ச்) காலையில் சி.ஐ.டி காலனி சென்று கனிமொழியையும், ராஜாத்தி அம்மாளையும் அழகிரி சந்தித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தனது உள்ளக் குமுறல்களை மு.க.அழகிரி எடுத்து கூறியதாக கூறப்படுகிறது.

அவரை ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும் ஆறுதல் கூறி சமாதானப் படுத்தினர். அப்போது கீழ்க்கண்டவாறு கனிமொழி அழகிரியிடம் கூறியதாக ஆரூடங்கள் வெளியாகியுள்ளது.

தலைவரின்முடிவுக்கு எதிராக எந்த விமர்சனமும் பண்ண வேண்டாம். எந்த நடவடிக்கையிலும்ஈடுபட வேண்டாம். அப்பாவிடம் பேசுகிறேன். எல்லாம் சரியாகி விடும். தி.மு.க.வுக்குஎதிரான சக்திகள் வீடு தேடி வந்து ஆதரித்தாலும் நாளை கைவிட்டு விடுவார்கள்.எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். தி.மு.க.வுக்குஎதிரான சக்திகளுடன் கைகோர்த்தால் கட்சியை விட உங்களுக்கு தான் பாதிப்புஅதிகம். உங்கள் எதிர்ப்பால் தி.மு.க.வின் பாரம்பரிய ஓட்டுகள்பாதிக்கப்படாது. ஆனால் அ.தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டுகள் தி.மு.க.வுக்குகிடைக்காமல் பா.ஜனதா அணிக்கு சென்று விடும் உங்களுக்கு நிரந்தர பாதுகாப்பு தி.மு.க. மட்டுமே”

-இவ்வாறு கூறிய கனிமொழி மேலும் “புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவுடன் தான்நான் ராஜிய சபா உறுப்பினர் ஆனேன். அவரை தோற்கடிப்பேன் என்று பேசியதுவருத்தமாக உள்ளது. நமக்கு உதவியவர்களுக்கு நாமும் சரியான நேரத்தில் உதவவேண்டும். தலைவருக்கும், கட்சிக்கும் தான் ஓட்டுக்கள் உண்டு. நாம்எல்லோரும் அவரின் நிழலின் தான் இருக்கிறோம். எனவே அவருடைய மனம்புண்படும்படி, நடந்து கொள்ளாதீர்கள்” என்றும் கூறியுள்ளார்.

தாய்தயாளு அம்மாளின் ஆறுதல் மற்றும் ராஜாத்தி அம்மாள், கனிமொழியின் ஆறுதல்வார்த்தைகளாலும், ஆலோசனைகளாலும் சமாதானமாகியுள்ள மு.க. அழகிரி இனி தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், அழகிரி-கருணாநிதி மோதலில் குளிர் காயலாம், அதனால் திமுகவிற்கு நேரும் தோல்வியை ரசிக்கலாம் எனக் காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மேலும் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழலாம் என்றும் தமிழக அரசியலை அணுக்கமாகக் கண்காணித்து வருபவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.