Home வணிகம்/தொழில் நுட்பம் டொயோட்டாவின் அவலான் கார்களில் ‘ஏர் பேக்’ குறைபாடு!

டொயோட்டாவின் அவலான் கார்களில் ‘ஏர் பேக்’ குறைபாடு!

630
0
SHARE
Ad

2003-Toyota-Avalonமார்ச் 28 – டொயோட்டா நிறுவனம்  தனது வாடிக்கையாளர்களிடமிருந்து 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டு மாடல் அவலான் சேடான் கார்களை ‘ஏர் பேக்’ (Air Bag) குறைபாடு காரணமாக திரும்பப் பெற இருக்கின்றது. இதன் எண்ணிக்கை 119,000 ஆகும்.

இது குறித்து அந்நிறுவனம் கூறியதாவது:-

” பயணர் பாதுகாப்பு ‘ஏர் பேக்’ (Air Bag) -ன் மின்சுற்றில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக, சீட் பெல்ட் Pretensioner திடீரென இறுக்கத்தை ஏற்படுத்தி பயணம் செய்வோருக்கு அசவுகரியத்தை கொடுக்கிறது. இந்தக் குறைபாடு உடனடியாக பழுது பார்க்கப்படும்” என அந்நிறுவனம் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

டொயோட்டா நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டு தயாரிப்பு கார்களில், இதே போன்றதொரு பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதன் விளைவாக அமெரிக்காவின் நீதித்துறைக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் நஷ்ட ஈடாக கொடுக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.