சென்னை, மார்ச் 29 – விஜய். சமந்தா பட படப்பிடிப்பால் (ராபிக் ஜாம்) சாலையில் அதிக நெறுக்கடி ஏற்பட்டதால் ஐதராபாத்தில் போலீசாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டனர் வாகன ஓட்டிகள்.
இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. துப்பாக்கி படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்துக்கு கத்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
வாகன போக்குவரத்து நிறைந்த சந்திரயான்குட்டா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நேற்றுமுன் தினம் காலை 10 மணி அளவில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு துறை போலீசார் குவிந்தனர்.
சில நிமிடங்களில் மேம்பாலத்தின் வழியை அடைத்துவிட்டு வாகனங்களை வேறு பாதைக்கு திருப்பி விட்டனர். இதனால் அதிக வாகன நெறிசல் ஏற்பட்டது. 11 மணி அளவில் விஜய், முருகதாஸ், சமந்தா மற்றும் பட குழுவினர் மேம்பாலத்துக்கு வந்தனர்.
அங்கு விஜய், சமந்தா நடித்த பாடல் காட்சி படமாக்க தொடங்கினார்கள். மேம்பாலபோக்குவரத்து தடைபட்டதால் அப்பகுதியில் மணிக்கணக்கில் வாகன நெறிசல் ஏற்பட்டது.
இதனால் எரிச்சல் அடைந்த வாகன ஓட்டிகள் பிரச்சனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசாரிடம் நெரிசல் மிகுந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதிகொடுத்தது எப்படி? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.