Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவில் பரபரப்பான விற்பனையில் நோக்கியா எக்ஸ்!

சீனாவில் பரபரப்பான விற்பனையில் நோக்கியா எக்ஸ்!

782
0
SHARE
Ad

Nokia xமார்ச் 31 – சீனாவில் நோக்கியா எக்ஸ் திறன்பேசிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜெடி.காம் என்ற இணையத்தள முகமை நிறுவனம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி, காலை 10 மணியளவில் நோக்கியா எக்ஸுக்கான முன்பதிவைத் திறந்தது.

ஆனால் ஆச்சர்யமாக அடுத்த 4 நிமிடங்களில் அதன் ஒட்டுமொத்த நோக்கியா எக்ஸ் திறன்பேசிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவித்துள்ளது. எனினும் ஜெடி.காம் நிறுவனம் தனது துவக்க விற்பனையில் எத்தனை திறன்பேசிகளை விற்பனை செய்தது என்ற கணக்கு தெரியவில்லை.

#TamilSchoolmychoice

ஜெடி.காம் நோக்கியா எக்ஸ் திறன்பேசியை 599 ஆர்எம்பி (315 ரிங்கிட்) க்கு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

நோக்கியாவின் இந்த ஆண்டிராய்ட் திறன்பேசிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, நோக்கியா எக்ஸ்+, நோக்கியா எக்ஸ் எல் போன்ற ஆண்டிராய்ட் வகை போன்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் சரிவடைந்திருந்த நோக்கியாவின் சந்தை விற்பனை மீண்டும் சூடுபிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.