Home இந்தியா இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா!

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா!

575
0
SHARE
Ad

40008b08-91e2-4e8c-94df-832e9c72d974டெல்லி, ஏப்ரல் 1 – இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 67-வயதுடையா நான்சி பாவெல், கடந்த 2012 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டார்.

தெற்காசிய அரசியல் விவகாரங்களில் நல்ல அனுபவம் உடையவராகத் திகழ்ந்த இவர், இதற்கு முன்பு பாகிஸ்தான், நேபாளம், கானா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்த அவர், தனது ராஜிநாமா கடிதத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும் மே மாதம் தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று ஓய்வு எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நான்சி ராஜிநாமா குறித்து ஒபாமா அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “நான்சி பாவெலுக்கும் அமெரிக்க அதிபர் அலுவலக அதிகாரிகளுக்கும் இடையே எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. அவர் தனது 37 ஆண்டு கால பணியை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.” என்றனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி கார்ப் கூறியபோது, “பாவெல் அமெரிக்காவுக்கான தூதராக இந்தியா, உகாண்டா, கானா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்” என்றார்.