Home உலகம் நான்சி பாவெல் ராஜினாமாவில் அரசியல் பின்னணி இல்லை – அமெரிக்கா

நான்சி பாவெல் ராஜினாமாவில் அரசியல் பின்னணி இல்லை – அமெரிக்கா

618
0
SHARE
Ad

Nancy Powellவாஷிங்டன், ஏப்ரல் 3 – இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல் கடந்த திங்கட் கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவின் பின்னணியில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டது தான் காரணம் எனக் கூறப்பட்டது. இதனை மறுத்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், அவர் முன்கூட்டியே திட்டமிட்டபடிதான் ஓய்வு பெற்றுள்ளார் என்று  தெரிவித்துள்ளது.

நான்சி பாவெல் தனது பதவி ராஜினாமாவை இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அறிவித்தது மிகுந்த கவனத்தைப் பெற்றது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற சில சம்பவங்களால் நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கு வசதியாக நான்சி ராஜினாமா செய்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக வரும் புதிய தூதர், இந்தியாவுடன் இணக்கமான நட்புறவை ஏற்படுத்துவார் என்றும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“நான்சியின் ராஜினாமாவுக்கு பின்னால், முக்கியமான காரணம் ஏதும் இல்லை. அவரின் ராஜினாமா குறித்து வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை. வெளியுறவுத் துறையில் 37 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள அவர், முறைப்படி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனால், ராஜினாமா செய்யும் முடிவை இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் ஏன் அறிவித்தார் எனத் தெரியவில்லை. அவர் ஓய்வு பெறுவது தொடர்பாக நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தார். அதன்படியே இப்போது பதவி விலகி உள்ளார். இந்தியாவுடனான உறவு ஒரு நபரை மட்டுமே சார்ந்து இல்லை. புதிதாக அமையவுள்ள இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்” என்று ஹார்ப் கூறினார்.

66 வயதாகும் நான்சி பாவெல், இந்தியாவில் தூதராக பணிபுரிந்தபோதுதான், அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டார். இந்த பிரச்சினையில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.