Home நாடு சபாவில் ஆயுதமேந்திய கும்பல் இருவரைக் கடத்திச் சென்றது!

சபாவில் ஆயுதமேந்திய கும்பல் இருவரைக் கடத்திச் சென்றது!

602
0
SHARE
Ad

west chinaசபா, ஏப்ரல் 3 – சபா மாநிலத்தில் நேற்று இரவு உல்லாச ஓய்வகம் ( Resort) ஒன்றில் சீனாவில் இருந்து மலேசியாவிற்கு சுற்றுலா வந்த ஒருவரையும், தங்கும் விடுதி ஊழியர் ஒருவரையும் ஆயுதமேந்திய கும்பல் கடத்திச் சென்றுள்ளதாக சீனப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘வெஸ்ட் சீனா மெட்ரோபோலிஸ் டெய்லி’ என்ற அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின் படி, ‘சிங்கமட்டா ரீவ் ரிசார்ட்’ என்ற அந்த ஓய்வகத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் திடீரென ஓய்வகத்திற்குள் நுழைந்து அவர்கள் இருவரையும் கடத்திக் கொண்டு, ஒரு சில நிமிடங்களில் அங்கிருந்து சென்று விட்டதாக ஓய்வகத்தின் மேலாளர் விக்கி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த இருவரில் ஒருவர், சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கௌ ஹுயாயுன் (வயது 20) என்றும், மற்றொருவர் அந்த ஓய்வகத்தில் பணியாற்றும் ஊழியர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ஓய்வகத்தில் தங்கியிருந்த 61 பேர் (59 சீனர்கள்) தங்களை அறையைக் காலி செய்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே MH370 விமானம் மாயமான விவகாரத்தில் கவலையுடன் இருக்கும் சீன அரசாங்கம் இந்த சம்பவத்தால் இன்னும் எரிச்சலடைய நேரிடும் என்று கூறப்படுகின்றது.

கடந்த வருடம் சபா கிழக்குக் கடற்கரைப் பகுதி வழியாக சுலு படையினர் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததைத் தடுக்க மலேசிய அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவிட்டது.

எனினும், கடந்த நவம்பர் மாதம், செம்பூர்ணா அருகேயுள்ள தீவில் சுற்றுலா வந்திருந்த தாய்வானைச் சேர்ந்த தம்பதியரில் கணவனை சுட்டுக் கொன்ற கும்பல் ஒன்று, அவரது மனைவியைக் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.