இது குறித்து மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் கூறுகையில், “சீனப் பயணிகளின் குடும்பத்தினரிடம், சீன மெண்டரின் மொழியில் பேசி அவர்களுக்கு புரிய வைப்பதற்காக சியூ மெய் பன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்முடிவு அண்மையில் நாடாளுமன்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக சியூ மெய் பன், துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஹம்சா ஜைனுடின் ஆகியோர் தலைமையிலான குழு பெய்ஜிங் செல்வதாகவும் லியோ தெரிவித்துள்ளார்.
Comments