Home நாடு செம்பூர்ணா கடத்தல்: பிணையாளிகளை விடுவிக்க 36.4 மில்லியன் ரிங்கிட் கேட்கிறார்கள் – சாஹிட் தகவல்

செம்பூர்ணா கடத்தல்: பிணையாளிகளை விடுவிக்க 36.4 மில்லியன் ரிங்கிட் கேட்கிறார்கள் – சாஹிட் தகவல்

751
0
SHARE
Ad

Kidnappedகோலாலம்பூர், ஏப்ரல் 10 – செம்பூர்ணா தீவு அருகேயுள்ள ஓய்வகத்திலிருந்து கடத்தப்பட்ட இரு வெளிநாட்டுப் பெண்களையும் விடுவிக்க வேண்டுமானால் 36.4 மில்லியன் ரிங்கிட் கொடுக்க வேண்டும் என்று கடத்தல் காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சாஹிட், ” கடத்தப்பட்டவர்களை விடுவிக்க 500 மில்லியன் பிசோஸ் (36.4 மில்லியன்) பெருந்தொகையை கொடுக்க வேண்டுமென்று கேட்டு கடத்தல்கார்களிடமிருந்து எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் குழுவை அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி, செம்பூர்ணாவிலுள்ள சிங்கமடா ரீஃப் ஓய்வகத்தில் புகுந்த ஆயுத மேந்திய கும்பல் அங்கிருந்த சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கௌ ஹுவா யுவான் (வயது 29) மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓய்வக ஊழியர் மார்சி டராவான் (வயது 40) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றனர்.

#TamilSchoolmychoice

இந்த கடத்தல்காரர்களுக்கும் அபு சயாஃப் போராளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.