Home கலை உலகம் ஜெயா தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு – பரவசத்தில் வடிவேலு!

ஜெயா தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு – பரவசத்தில் வடிவேலு!

1228
0
SHARE
Ad

thillalangadi-vadiveluசென்னை, ஏப்ரல் 10 – இந்த நேரம் பொல்லாத நேரம் என்று புலம்பிக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவுக்கு, கடும் கோடையில் பன்னீர் குளியல் போட்ட சந்தோஷத்தில் திளைக்கிறார்.

மூன்றாண்டு வனவாசத்துக்குப் பிறகு அவர் நாயாகனாகா நடித்து வெளியாகும் படம் தெனாலிராமன். வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி படம் வெளிவரவுள்ள நிலையில், அந்தப் படத்துக்கு எதிராக சிலர் கோஷம் போட ஆரம்பித்து, வடிவேலுவுக்கு அதிர்ச்சித்தந்தனர்.

நாம் தமிழர் சீமான்தான் இந்த இக்கட்டில் வடிவேலுவுக்கு உதவிக்கரம் நீட்டினார். இந்த நிலையில்தான் வடிவேலுவே எதிர்ப்பார்க்காத ஒரு இடத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அது ஆளும்கட்சியின் தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சியிலிருந்து.

#TamilSchoolmychoice

ஆஹா! வந்துடுச்சிய்யா விடிவு காலம் என குதூகலித்தவர், அழைப்பில் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் அலுவலகத்தில் போய் நின்றார் வடிவேலு. வருகிற தமிழ்ப் புத்தாண்டுக்காக ஜெயா தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டி வேண்டும் என்றதும், சந்தோஷமாக மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.

பேட்டியில் தாராளமாக அம்மாவின் புகழையும் பாடியுள்ளாராம். அம்மாவுக்கு என் நடிப்பு பிடிக்கும். திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் என் காமெடியைப் பார்த்து கைதட்டிச் சிரிச்சவுகளாச்சே அந்த மவராசி என புகழ்ந்து தள்ளியிருக்கிறார் வடிவேலு.