அயர்லாந்த், ஏப்ரல் 10 – இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் அடைந்தபின் முதன் முறை அரசு பயணமாக யாக, அயர்லாந்து குடியரசு அதிபர் மைக்கேல் டி.ஹிக்கின்ஸ் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் .
வட அயர்லாந்தில் நடந்த மோதல் காரணமாக இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, இரு நாட்டு உறவுகளும் முன்னேறியிருக்கின்றன என்பதை ஹிக்கின்ஸ் பயணம் காட்டுவதாக கருதப்படுகிறது.
லண்டன் வருவதற்கு முன்னர் அவர் கூறுகையில், “பழைய பிரச்சனைகளை முற்றிலும் துடைத்து எடுத்துவிடுவது என்பதை விட, இரு நாடுகளுக்குமிடையே இந்த அளவுக்கு சுமுகமான உறவுகள் நிலவும் இந்தத் தருணத்தில்,
எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுவதுதான் இப்போதைக்கு இருக்கும் சவால்” என்று கூறியுள்ளார். ஹிக்கின்ஸ் இந்த பயணத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார் எனத் தெரிகிறது. பிரிட்டிஷ் அரசி எலிசபத் அயர்லாந்து குடியரசுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.