Home உலகம் அயர்லாந்தில் பயங்கரம்: கழிவறைத் தொட்டியில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!

அயர்லாந்தில் பயங்கரம்: கழிவறைத் தொட்டியில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!

545
0
SHARE
Ad

5501524-3x2-940x627டுவாம், ஜுன் 6 – அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் திருமணம் ஆகாத பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்தனர்.

அந்த பாதுகாப்பு இல்லத்தில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 1925–ம் ஆண்டு முதல் 1961–ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த அந்த இல்லத்தை சில காரணங்கள் கருதி மூடிவிட்டார்கள். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இல்லத்தின் அருகே உள்ள கழிவறை தொட்டியின் கரை கலவை இடிந்து விழுந்தது. அப்போது அந்த தொட்டிக்குள்ளே ஏராளமான குழந்தைகளின் எலும்பு கூடுகள் கிடந்தன.

#TamilSchoolmychoice

800px-Polandபிறந்து 2 நாள் ஆன குழந்தைகளில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளின் எலும்பு கூடுகள் அவற்றில் கிடந்தன. மொத்தம் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அயர்லாந்தில் 1840–ம் ஆண்டு கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது பட்டினியால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதில் இறந்த குழந்தைகளின் எலும்பு கூடாக இது இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் தற்போது அது சம்மந்தமாக ஆய்வாளர்கள் ஆய்வு செய்த ஆய்வில்அதில் இந்த குழந்தைகள் பட்டினியால் இறந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்தது.

அந்த இல்லத்தில் தங்கி இருந்த பெண்களோ அல்லது இல்லத்தை நடத்தியவர்களோ குழந்தைகளை கொன்று கழிவறை தொட்டியில் போட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே இதுபற்றி விசாரணையை அயர்லாந்து அரசு மேற்கொண்டு வருகின்றது.