அவ்வகையில் இன்று அயர்லாந்திற்குச் சென்றடைந்தார் மோடி. அயர்லாந்தின் டுப்ளின் நகரைச் சென்றடைந்த மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு அவர் அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியைச் சந்தித்து இருதரப்பு உறவு குறித்த பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறார்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் அயர்லாந்து செல்வது இதுவே முதன் முறையாகும்.
அயர்லாந்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை அமெரிக்கா செல்கிறார்.அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசுகிறார்.
அதன்பின்பு 25-ஆம் தேதி ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும்,ஐநாவின் நிலையான வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெறும் உச்சி மாநாட்டில் உரையாற்றுகிறார்.
அங்கு பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, முன்னணி நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்கிறார்.
அதற்கடுத்த நாள் 6-ஆம் தேதி பேஸ்புக் தலைமை அலுவலகம் செல்கிறார். மேலும், சான் ஜோஸில் இந்திய வம்சாவளியினரையும் அவர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.