காங்கிரஸ் ஆட்சி காலத்தில், இந்தியாவிற்குள் நுழைய முடியாதபடி, ராமசாமிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முயற்சியால், அந்த தடை நீக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“5 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசினேன். அப்போது, திமுக ஆட்சி நடந்தது. பதவி அதிகாரத்தில் இருந்ததால் ஈழத்தமிழர்களை அவர்கள் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காப்பாற்றவில்லை. அது எனக்கு மிகப் பெரிய வேதனையாக இருந்தது. எனவே, கருணாநிதியை விமர்சித்தேன். பிரதமர் மன்மோகன் சிங்கையும் விமர்சித்தேன். தமிழர்களின் பிரச்னைகளைப் பேசியதற்காக, இந்திய அரசு எனக்குத் தடை விதித்தது. அதில், கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு. கடந்த 5 ஆண்டுகளாக என்னால் தமிழ்நாட்டிற்கு வரமுடியவில்லை”
“அந்த சபதத்தை வைகோ இப்போது நிறைவேற்றிவிட்டார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் சாதாரணம் இல்லை. எனக்காக, பிரதமர் மோடியையே நேரில் சந்தித்தார். பிரதமரை சந்தித்த பிறகும், அவர் எடுத்த கடும் முயற்சிகளுக்குப் பிறகே என் மீதான தடை நீக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், தமிழ்நாடு என்றாலே, ஊழல் தான் எங்கள் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றமும், மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.