சிங்கப்பூர் – சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் இயூ அளித்த சில நேர்காணல்களின் உரிமம் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கம் கேட்டு, அவரின் இரு இளைய பிள்ளைகளான லீ வெய் லிங் மற்றும் லீ சியான் யாங் ஆகியோர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
அரசாங்கத்தின் வாய்மொழி வரலாற்றுத் துறையிடம் அந்த நேர்காணல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் நடப்பு பிரதமரான லீ சியான் லூங்கின் உடன்பிறந்தவர்களான அவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் தங்களது மனுவைத் தாக்கல் செய்ததாகவும், அந்த மனுவிற்கான உரிய விளக்கங்களை அரசாங்கம், நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யும் என்றும் அந்நாட்டு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த மார்ச் 23-ம் தேதி, தமது 91-வது வயதில் லீ குவான் இயூ காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.