Home உலகம் மலேசியாவை விட்டு பிரிந்தது தான் குவான் இயூ வாழ்வில் ‘மிகவும் வருத்தமான தருணம்’ – சிங்கப்பூர்...

மலேசியாவை விட்டு பிரிந்தது தான் குவான் இயூ வாழ்வில் ‘மிகவும் வருத்தமான தருணம்’ – சிங்கப்பூர் பிரதமர்

881
0
SHARE
Ad

??????????????கோலாலம்பூர், மார்ச் 30 – “லீ குவான் இயூவின் வாழ்வில் ‘மிகவும் வருத்தமான தருணம்’ என்றால் அது மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்தது தான், ஆனால் அந்த பிரிவு தான் சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது” என்று லீ குவான் இயூவின் மகனும், சிங்கப்பூரின் நடப்பு பிரதமருமான லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற லீ குவான் இயூவின் இறுதிச்சடங்கில் பேசிய லீ சியான் லூங், “புதிய மலேசியா கூட்டமைப்பை உருவாக்க ‘மலாயாவுடன் இணைத்தல்’ என்ற கோரிக்கையுடன் சிங்கப்பூரின் சுதந்திரத்திற்காக லீ குவான் இயூ போராடினார். அது வெற்றியடைவதற்காக ஓய்வின்றி உழைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முயற்சி தோல்வியடைந்து நாங்கள் மலேசியாவை விட்டு பிரிந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சியான் லூங் கூறுகையில், “சிங்கப்பூரில் இனம், மதம், மொழி சார்ந்த எந்த ஒரு பிரிவினையும் கிடையாது. ஆனால் பல்லினம், சமத்துவம், தகுதிக்கு மதிப்பு, ஒருமைப்பாடு மற்றும் சட்டம் ஆகிய அடிப்படை கொள்கைகள் உள்ளன.” என்றார்.

#TamilSchoolmychoice

“இந்த நாடு எந்த ஒரு சமுதாயத்திற்கும் சொந்தமானது அல்ல. மாறாக இது நமது நாடு” என தனது தந்தை அறிவித்தார் என்பதை குறிப்பிட்ட லீ சியான் லூங், மக்கள் அனைவரும் தங்களது தாய்மொழியைப் படிக்க வேண்டும் ஆனால் ஆங்கிலத்தை பொது மொழியாகக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.

நெருக்கடியான காலக்கட்டங்களில், அனைவரும் நம்பிக்கை இழந்த சமயங்களில் எல்லாம் பிரச்சனைகளை சமயோசிதமாகவும், அதிவிரைவாகவும் செயல்பட்டு தீர்த்தவர் லீ குவான் இயூ என்றும், உலகத்தரத்தில் மூன்றாவதாக இருந்த சிங்கப்பூரை முதல் தரத்திற்கு உயர்த்தியவர் என்றும் லீ சியான் லூங் குறிப்பிட்டுள்ளார்.