Home கலை உலகம் ரஜினி, கமல், விஜய், அஜீத்தின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

ரஜினி, கமல், விஜய், அஜீத்தின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

765
0
SHARE
Ad

rajini,vijayசென்னை, ஜூன் 6 – கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா? கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாஸன், அஜீத், விஜய், சூர்யா ஆகியோர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் பற்றி பார்ப்போம்.

ரஜினிகாந்த்: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர் பலமொழிகளில் வெளியிடப்படும் படத்திற்கு ரூ. 30 கோடியும், தமிழில் மட்டும் வெளியிடப்படும் படத்திற்கு ரூ.20 முதல் 25 கோடி சம்பளமும் பெறுகிறார்.

கமல்: உலக நாயகன் கமல்ஹாஸன் படம் ஒன்றுக்கு ரூ.25 கோடி வாங்குகிறார். அவர் படத்தின் திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்பேற்றால் கூடுதல் சம்பளம் வாங்குவார்.

#TamilSchoolmychoice

விஜய்: இளைய தளபதி விஜய் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ.20 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அஜீத்: தல அஜீத் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வாங்குகிறார்.

சூர்யா: படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கும் சூர்யா படம் ஒன்றுக்கு தெலுங்கு உரிமையுடன் ரூ.18 கோடி வாங்கிறார். தெலுங்கு உரிமை மூலம் அவருக்கு மேலும் சில கோடிகள் கிடைக்கும்.

herosவிக்ரம்: விக்ரம் அண்மையில் வெற்றி படம் எதுவும் கொடுக்கவில்லை. அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ஐ’ படத்திற்கு ரூ. 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

கார்த்தி: கார்த்தியின் படங்கள் அடுத்தடுத்து படுத்துவிட்டதால் அவரது மார்க்கெட் சற்று தொய்வாக உள்ளது. அவர் ஒரு படத்திற்கு தெலுங்கு வினியோக உரிமையை சேர்த்து ரூ. 8 முதல் 10 கோடி வாங்குகிறார்.

தனுஷ்: பாலிவுட், கோலிவுட் என மாறி மாறி நடிக்கும் தனுஷ் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி வாங்குகிறார்.

சிம்பு: சிம்பு தனுஷை போன்று படம் ஒன்றுக்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்குகிறார்.

ஆர்யா: அடிக்கடி செய்தியில் வரும் ஆர்யா ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வாங்குகிறாராம்.

விஷால்: விஷால் படம் ஒன்றுக்கு ரூ. 4 முதல் 5 கோடி சம்பளம் பெறுகிறார்.

ஜீவா: யான் படத்தில் நடித்துள்ள ஜீவா படம் ஒன்றுக்கு ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

இதுதான் நமது தமிழ் சினிமா கதாநாயகர்கள் வாங்கும் சம்பளம்.