Home வணிகம்/தொழில் நுட்பம் இக்னிசன் ஸ்விட்ச் குறைபாடிற்கு பொறுப்பேற்றது ஜெனரல் மோட்டார்ஸ் – 15 உயர் அதிகாரிகள் பணி நீக்கம்!   

இக்னிசன் ஸ்விட்ச் குறைபாடிற்கு பொறுப்பேற்றது ஜெனரல் மோட்டார்ஸ் – 15 உயர் அதிகாரிகள் பணி நீக்கம்!   

536
0
SHARE
Ad

Mary-Barra-GM-0நியூயார்க், ஜூன் 6 – அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ (General Motors), தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த 15 உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், ஐந்து பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம், இக்னிசன் ஸ்விட்ச் (Ignition-switch) குறைபாடு காரணமாக சுமார் 2.6 மில்லியன் ‘சடர்ன் லான்’ (Saturn Lon)  மற்றும் சில சிறிய ரக கார்களை திரும்பப் பெற்றது. இந்த குறைபாட்டின் விளைவாக ஏற்பட்ட விபத்தில் 13 பேர் இறந்தனர்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரும் தலை குனிவும், வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவும் ஏற்படக் காரணமாக இருந்த இந்த குறைபாடு, சில உயர் அதிகாரிகளின் கவன மின்மை காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பெர்ரா நடத்திய விசாரணையில் தரக் குறைபாட்டிற்கு காரணமாக இருந்த 15 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து மேரி பெர்ரா கூறுகையில், “ஜெனரல் மோட்டார்ஸின் சிறிய ரக கார்களில் ஏற்பட்ட இக்னிசன் ஸ்விட்ச் குறைபாட்டிற்கு எங்கள் நிறுவனம் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. மேலும், விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த நஷ்டயீடு விரைவில் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.      

கடந்த 2001-ம் ஆண்டே இந்த குறைபாடுகள் பற்றி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தெரிந்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அந்நிறுவனத்திற்கு 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.