Home தொழில் நுட்பம் 2016-ல் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஜெனரல் மோட்டார்ஸ்! 

2016-ல் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஜெனரல் மோட்டார்ஸ்! 

533
0
SHARE
Ad

General-Motorsநியூயார்க், செப்டம்பர் 9  -அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இன்னும் இரண்டு ஆண்டுகளில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல்களை குறைக்கவும் அதி நவீன வசதிகளுடன் கூடிய கார்களை வடிவமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேரி பெர்ரா கூறியதாவது:-

“பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்ச்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதற்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய தொழிநுட்பத்தில் பயணத்தின் போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் போக்குவரத்து நெரிசல், வேகம் மற்றும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.”

#TamilSchoolmychoice

“இதற்காக கார்கள் ‘வைஃபை’ (wifi) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட இருக்கின்றன. மேலும், விபத்துகளைத் தவிர்ப்பதற்காக தானியங்கித் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த நவீன தொழில்நுட்பங்களால் பயனர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை கொடுக்க முடியும். மேலும் இதன் மூலம் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விபத்துகளை குறைக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் விபத்துகளால் அமெரிக்காவில் ஆண்டுதோறும், 870 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சேதம் ஏற்படுகின்றது என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.