ஏப்ரல் 3 – அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ (General Motors) வாடிக்கையாளர்களிடம் இருந்து 2004-2010 ஆம் ஆண்டு ரக Chevy Malibus, HHRs and Cobalts, Saturn Auras and IONs மற்றும் Pontiac G6s கார்களை ‘பவர் ஸ்டியரிங்’ (Power Steering) குறைபாடு காரணமாக திரும்பப் பெற இருக்கின்றது. இதன் எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆகும்.
இது குறித்து அந்நிறுவனம் கூறியதாவது:-
‘பவர் ஸ்டியரிங்’ குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கார்களில் power-steering motors, steering columns மற்றும் power-steering motor-control units போன்றவற்றை அந்தந்த வாகனங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்துக்கொடுக்கப்படும்” என்று அறிவித்தது.
இந்நிறுவனம் இந்த வருடத்தில் மட்டும் இரண்டாவது முறையாக வாகனங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறுகின்றது. கடந்த பிப்ரவரி மாதம், இக்னிசன் ஸ்விட்ச் (Ignition-switch) குறைபாடு காரணமாக சுமார் 2.6 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெற்றது. இந்த குறைபாட்டின் விளைவாக ஏற்பட்ட விபத்தில் 13 பேர் இறந்துள்ளனர்.
‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனம் இக்னிசன் ஸ்விட்ச் குறைபாடு விஷயத்தில் கவனக்குறைவாக நடந்துகொண்டதாகவும், இதனால் அதன் நன்மதிப்பை இழந்து வருவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.